உயிரைப் பணயம் வைக்கும் கடல் வாழ்க்கை!

மீனவர்களுக்கு தாய்மடியாகவும், தொட்டிலாகவும் இருப்பது அவர்கள் பயணிக்கும் படகு.

கடல் அன்னை

பல விசித்திரங்களை உள்ளடக்கியது சமுத்திரம். கடல் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் பலப்பல. நிலப்பரப்பைவிட நீர்ப்பரப்பு அதிகம் என்பதையும், மலை உச்சியைவிட கடலின் ஆழம் கூடுதல் என்பதையும் நாம் அறிவோம். இப்படி பல சிறப்புகளைக் கொண்டுள்ள கடல் அன்னையாகவும் வணங்கப்படுகிறது.

போராட்ட வாழ்க்கை

மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது இந்தக் கடல்தான். மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் மீனவர்களின் ஒவ்வொரு நாளும் போராட்ட வாழ்க்கையே. உயிருக்கும் அச்சுறுத்தல் உண்டு என்பதை அறிந்திருந்தும் தங்கள் வாழ்க்கை ஓட்டத்திற்காக, குடும்பத்தை பத்திரமாக கரையில் விட்டுவிட்டு கடலுக்குள் பயணித்து வருகிறார்கள் மீனவர்கள்.

மீனவர்களின் வாழ்க்கை

மீனவர்களுக்கு தாய்மடியாகவும், தொட்டிலாகவும் இருப்பது அவர்கள் பயணிக்கும் படகு. ஒரு பிரம்மாண்ட வீட்டை உருவாக்குவதுபோல்தான் படகுகளைத் தயாரிக்கிறார்கள். ஒரு படகு தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதை மிகுந்த பாதுகாப்பு அம்சத்துடன் உருவாக்க வேண்டியது அவசியம்.

கடலுக்குள் செல்லும் மீனவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என்ன, ஒரு படகு எந்தெந்த சிறப்பம்சத்துடன் தயாரிக்கப்படுகின்றன, உயிரைப் பணயம் வைத்துப் பயணித்தும் அவர்களுக்குப் போதிய வருவாய் கிடைக்கிறதா... இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான விடை அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ:- https://m.youtube.com/watch?v=zq_0-LSDBiA

X