மேகதாது விவகாரம்: சட்டமும் அரசியலும்!

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் காவிரி-டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என அஞ்சப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. தமிழகத்தின் தண்ணீர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

மேகதாது அணை

இதற்கு மத்தியில், தமிழக எல்லையையொட்டி கர்நாடக பகுதியில் மேக்கேதாட்டு எனப்படும் மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பாலைவனம்

`அணை கட்டியே தீருவோம்` என்று கர்நாடக அரசும், `அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்`என தமிழ்நாடு அரசும் உறுதியான நிலைப்பாடுகளில் உள்ளன. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் காவிரி-டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என அஞ்சப்படுகிறது.

இதனால் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்து பார்த்திடுங்கள்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=QeDRH_Oz7LM

X