மிசா காலத்தின் அதிர்ச்சி வரலாறு!

தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்த தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற கருத்தை முன்னிறுத்தி மிசா (Maintenance of Internal Security Act) என்கிற சட்டத்தை 1971-ம் ஆண்டில் அப்போதைய பிரதம மந்திரி இந்திரா காந்தி கொண்டு வந்தார்.

இதற்கு மத்தியில் தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் 1975-ம் ஆண்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார் இந்திரா காந்தி. ஆட்சிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்த தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 88 பேர் கைதாகினர். இவர்களில் மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு, முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு சித்ரவதைகள் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொழுநோயாளிகள் உள்ள அறைகளில் அடைக்கப்பட்டது, உணவில் வேப்பெண்ணெய் கலந்து கொடுத்தது என அடுக்கடுக்கான துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டனவாம். சிறையில் மு.க.ஸ்டாலினை தாக்க முயன்றதாகவும், அதை சிட்டிபாபு தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவருக்கு பலமான அடிகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய கொடூர செயல்கள் சிட்டிபாபு எழுதிய குறிப்புகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தன. அவர் அந்த டைரியில் வேறு என்னென்ன எழுதியிருக்கிறார்... இதுகுறித்த விசாரணை அறிக்கை சொல்வது என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள யூடியூப் லிங்க்கை கிளிக் செய்திடுங்கள்.

https://www.youtube.com/watch?v=Jyaj7x8l1Tc

X