என் பாடல் வரிகள் மீதே சந்தேகப்பட்டனர் - கவிப்பேரரசு வைரமுத்து

திரையுலகில் காலடி எடுத்து வைத்த காலக்கட்டத்தில் வைரமுத்து மீது முதலில் அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் கவித்துவமான - தனித்துவமான பாடல் வரிகளால் முத்திரை பதித்தவர் கவிப்பேரரசு வைரமுத்து.

தனது ஆரம்ப காலத்தில் பல போராட்டங்களைச் சந்தித்த பின்னரே வெற்றிக்கனியை எட்டிப் பிடித்தார்.

கவிதை என்பது வெறும் கடைச்சரக்கும் அல்ல, ஏட்டுச் சுரைக்காயும் அல்ல... அது சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு இசையும் திரைப்படமுமே சிறந்த வழி என்பதை இளம் வயதிலேயே தான் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.

திரையுலகில் காலடி எடுத்து வைத்த காலக்கட்டத்தில் வைரமுத்து மீது முதலில் அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவருடைய மனைவிதான் பாடல்களை எழுதிக் கொடுத்ததாக பலரும் கவிஞர் மீது புகார்கள் அடுக்கினார்கள். மனைவி எழுதிய பாடல்களை வைரமுத்து சந்தையில் விற்று வருவதாக வதந்திகள் வேகமாகப் பரவின. ஆனால், இதை அவர் நேர்மறையான சிந்தனையோடு எதிர்கொண்டார்.

இயக்குநர் பாரதிராஜாவின் அழைப்பின் பேரில், இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்த தருணத்தை தனது வாழ்வில் திருப்புமுனை தருணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். இலக்கணப் புலமை கொண்ட கவிஞர்கள் மெட்டுக்குப் பாடல் எழுதத் தயங்குவார்கள் என்ற அவநம்பிக்கையோடு அந்த நேரத்தில் இளையராஜா, கவிஞர் வைரமுத்துவைப் பார்த்தாராம்.

இசைஞானியை இம்ப்ரஸ் செய்வதற்காக `பொன்மாலைப் பொழுது` என்ற பாடலை அவர் உடனடியாகப் பாடிக்காட்டியபோது, எதிரில் இருந்த பாரதிராஜாவும் இளையராஜாவும் வியந்து போய்விட்டனராம்.

கல்லூரியில் பயிலும் காலத்தில் பிற மொழியில் உள்ள பாடல்களுக்கு தமிழில் வரி எழுதிப் பழகி பயிற்சியும் எடுத்துக் கொண்டாராம். இப்படி பல்வேறு காலங்களில் தான் கடந்து வந்த பாதை குறித்தும், ஞானபீட விருது கிடைத்தபோது அடைந்த மகிழ்ச்சி குறித்தும் வைரமுத்து பகிர்ந்து கொண்டவற்றை அறிய, லிங்க்கை கிளிக் செய்து காணொளியாகக் காணுங்கள்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=QH5NsFR_Iqs

X