தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் தெய்வானையை முருகன் திருமணம் செய்து கொண்டதாக கோவில் புராணம் கூறுகிறது. எனவே, இங்கு மணக்கோலத்திலேயே முருகப்பெருமான் காட்சி தருகிறார். பல்வேறு விசேஷங்களுக்கும் திருப்பரங்குன்றம் பெயர் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோவிலை மையப்படுத்தி சர்ச்சை ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. கோவிலை ஒட்டியுள்ள மலையில் தீபத்தூண் ஒன்று உள்ளது. இந்தத் தீபத்தூணில் ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், இடையில் ஏற்பட்ட மத ரீதியான காரணத்தால் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் பழையபடி தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் இங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவது வாடிக்கையாகிவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சினை எப்போது தொடங்கியது, அதன் பின்னணி என்ன, நீதிமன்றம் இதுகுறித்து என்ன முடிவை எடுத்தது என்பன போன்ற முழு விவரங்களை அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்து பார்த்திடுங்கள்.
வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?app=desktop&v=1VWUHf123Vo