ஒரு பாடல் எழுத கவிஞனுக்கு தனிமையும், இயற்கைச் சூழலும் மிக அவசியம் என்று ஆணித்தரமானக் கருத்துக் கொண்டிருப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து.
ஒருவர் தன்னை இளமையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வப்போது தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதும் வைரமுத்து சொல்லும் ஆலோசனை.
முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், தற்போதைய முதல்-அமைச்சர் விஜய் மற்றும் கண்ணதாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குறித்த இவரின் கருத்து விசித்திரமானவை, ரசிக்கத்தகுந்தவை.
தாய் ஒருவரே உலகில் தன்னலமற்ற ஒரே உறவு என்று கூறும் வைரமுத்து சிறுவயதில் அவருடனான நினைவுகள் நெகிழ்ச்சியுடன் கூடியதாக இருந்ததை இன்றும் நினைவுகூர்கிறார்.
ஒவ்வொரு பாடல் பிறந்த தருணமும் தனக்கு விசித்திரமாக இருந்ததாகவும் அதன் பின்னணியில் பல சுவாரசியங்கள் நிறைந்திருந்ததாகவும் சொல்லும் வைரமுத்து தனது வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுத்து பாடல் வரிகளை வாங்கி இருக்கும் சூழ்நிலையில் பிற்காலங்களில் அந்தப் பாடலுக்கு மொத்த உரிமையும் யாருக்குச் சொந்தம் என்பது உள்ளிட்ட அவரது பல்வேறு கருத்துகளை அவரது வார்த்தைகளிலேயே அறிந்து கொள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்து பார்த்தும் கேட்டும் ரசித்திடுங்கள்.