ஆக்சன், திரில்லர் கதையில் விஜய் ஆண்டனி

ஆக்ஷன் - திரில்லர் கதையம்சத்தில் கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள `ஹிட்லர்' என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
ஆக்சன், திரில்லர் கதையில் விஜய் ஆண்டனி
Published on

விஜய் ஆண்டனி `ஹிட்லர்' என்ற படத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக வருகிறார். சரண்ராஜ், இயக்குனர் கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை `படை வீரன்', `வானம் கொட்டட்டும்' படங்களை இயக்கி பிரபலமான தனா டைரக்டு செய்கிறார். டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய்குமார் தயாரித்துள்ளனர். படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஆக்ஷன்-திரில்லர் கதையம்சத்தில் கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

இதில் முந்தைய படங்களில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். பரபர திருப்பங்களுடன் அனல் பறக்கும் திரைக்கதையில் அழகான காதலும் படத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இந்த படம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம். ஆனால் இன்று வரலாற்றில் அந்த பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இந்தப் படத்துக்கு `ஹிட்லர்' என்று பெயரிடப்பட்டு உள்ளது என்றும் கூறினர். இசை: விவேக் மெர்லின், ஒளிப்பதிவு: நவீன்குமார். படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com