திகில் கொலைகள் கதையில் விஜய் ஆண்டனி

திகில் கொலைகள் கதையில் விஜய் ஆண்டனி
Published on

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் `ரத்தம்'. இதில் நாயகிகளாக ரம்யா ரம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சி.எஸ்.அமுதன் டைரக்டு செய்துள்ளார். புதிய களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இந்தப் படம் உருவாகி உள்ளது.

படம் பற்றி சி.எஸ்.அமுதன் கூறும்போது, ``சில கொலைகள் நடக்கின்றன. கொலையாளி யார்? என்பது முதலிலேயே தெரிந்து விடும். அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளை மையப்படுத்தி புதுமையான திரைக்கதையில் இந்தப் படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி பத்திரிகையாளராக வருகிறார். பத்திரிகைத் துறை சம்பந்தமான விஷயங்களும், அதன் பங்கும் படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும்.

3 நாயகிகள் உள்ளனர். நந்திதா மீடியாவில் பணிபுரிபவராக வருகிறார். முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. கதைக்களமும் கொலைக்கான பின்னணியும் புதுமையாக இருக்கும்'' என்றார்.

விஜய் ஆண்டனி கூறும்போது, ``படத்தின் கரு வித்தியாசமானது. சில கொலைகளின் பின்னணியை படம் விரிவாக பேசும்'' என்றார். இந்தப் படத்தில் இடம்பெற்ற `ஒரு நாள்...' பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இசை: கண்ணன் நாராயணன், ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com