விஜய் படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்

தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்
Published on

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் அடுத்த படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. தளபதி 67 படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com