சீனாவில் வசந்த காலத்தை ஏர் பூட்டி வரவேற்ற மக்கள்

சீனாவில் வசந்த காலத்தை ஏர் பூட்டி வரவேற்ற மக்கள்
Published on

பெய்ஜிங்,

சீனாவில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குகிறது. இதனை, அந்நாட்டு மக்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை போற்றும் வித மாக நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஏர் பூட்டி நிலத்தை உழுவது போன்ற சடங்குகளைச் செய்து வசந்த காலத்தை முறைப்படி வரவேற்றனர்.

சீன கலாசாரத்தில் 'வசந்த காலம்' என்பது புதிய தொடக்கத்தையும், நல்ல விளைச்சலையும் குறிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதையொட்டி பல இடங்களில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய ஊர்வலங்களும் நடைபெற்றன.

காளைகளுக்கு மாலை அணிவித்து. நிலத்தில் ஏர் பூட்டி உழுவதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கண்கவர் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் கலந்து கொண்டு சீனர்களின் பாரம்பரியத்தை வியந்து பார்த்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com