"விருமன்" வெற்றிக் கொண்டாட்டம்... மதுரை திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த படக்குழு

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
"விருமன்" வெற்றிக் கொண்டாட்டம்... மதுரை திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த படக்குழு
Published on

மதுரை,

மதுரை திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, விருமன் படத்தை வெற்றியடைய செய்ததற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

விருமன் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் கார்த்தி, சூரி, நடிகை அதீதி சங்கர், இயக்குனர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர்.

அங்கு பேசிய நடிகர் கார்த்தி, மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என்றும், விருமன் படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கும், திரையரங்கு நிர்வாகிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com