

பரமக்குடி,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி பரமக்குடி வருகிறார். அப்போது வேந்தோணி கிராமத்தில் நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். இதுகுறித்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் அவை தலைவர் தீனதயாளன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்று பேசினார்.