விவோ எக்ஸ் 90, எக்ஸ் 90 புரோ

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் விவோ நிறுவனம் எக்ஸ் 90 மற்றும் எக்ஸ் 90 புரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ எக்ஸ் 90, எக்ஸ் 90 புரோ
Published on

இது 6.78 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதில் டைமென் சிடி 9200 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 12 ஜி.பி. ரேம் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4,870 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை உள்ளது. விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 120 வாட் சார்ஜருடன் இது வந்துள்ளது.

புரோ மாடலுக்கு 50 வாட் சார்ஜர் அளிக்கப்படுகிறது. இதனால் 50 சதவீத பேட்டரி 8 நிமிடத்தில் சார்ஜ் ஆகிவிடும். 27 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

எக்ஸ் 90 மாடலின் விலை சுமார் ரூ.59,999. எக்ஸ் 90 புரோ மாடலின் விலை சுமார் ரூ.84,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com