விவோ ஒய் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ ஒய் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமான விவோ நிறுவனம் புதிதாக ஒய் 27 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.64 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டதாக வந்துள்ள இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம்கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.14,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com