விவோ ஒய் 36 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ ஒய் 36 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

 விவோ நிறுவனம் புதிதாக ஒய் 36 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 6.64 அங்குல முழு ஹெச்.டி. திரை, ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு வசதி, பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் இடம் பெற்றுள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 44 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

தங்க நிறம், கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.16,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com