கதாநாயகனாக களமிறங்கும் ரக்‌ஷன்

நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்‌ஷன் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கதாநாயகனாக களமிறங்கும் ரக்‌ஷன்
Published on

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர், ரக்ஷன். இவர் அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

''உணர்வுப்பூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படம், இது. ரக்ஷனுடன் புதுமுகங்கள் பலரும் நடிக்கிறார்கள். கோ.யோகேந்திரன் டைரக்டு செய்கிறார். ரகு தயாரிக்கிறார்.

மலையாள பட உலகின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். பாடல்களை தாமரை எழுதுகிறார். படப்பிடிப்பை கன்னியாகுமரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Rakshan Vj (@rakshan_vj)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com