மகளிர், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி

புதுவையில் மகளிர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி
Published on

புதுச்சேரி

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மூலம் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பலவிதமான தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தையல், அழகுக்கலை, ஆரி ஒர்க், மாடி தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, ஆட்டோ டிரைவர், அலங்கார நகை செய்தல், மண் பொம்மைகள் செய்தல், சோப்பு ஆயில் மற்றும் பினாயில் தயாரிப்பு, பஞ்சு பொம்மை தயாரிப்பு, குரோஷா பின்னல், உணவு மதிப்பு கூட்டுதல், தேனீ வளர்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்காக கணினி பயிற்சி, வயர் நாற்காலி பின்னல், மர சிற்ப கலை போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை புதுச்சேரி நடேசன் நகரில் உள்ள மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com