போக்ஸ்வேகன் வெர்டுஸ் ஜி.டி.

போக்ஸ்வேகன் வெர்டுஸ் ஜி.டி.
Published on

போக்ஸ்வேகன் நிறுவனம் வெர்டுஸ் மாடலில் புதிய வேரியன்ட் டான ஜி.டி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே வெர்டுஸ் பிரிவில் 2 மாடல்கள் உள்ளன. தற்போதைய மாடலையும் சேர்த்து இது 3 ஆக உயர்ந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.20 லட்சம். இதில் 1.5 டி.எஸ்.ஐ. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறம் குரோமிய பூச்சு கொண்ட கிரில், கருப்புநிற அலாய் சக்கரம் ஆகியவை காருக்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.

முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதி ஏர்பேக் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. மழை உணர் வைபர், முகப்பு விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், திறந்து மூடும் மேற்கூரை ஆகியன இந்தக்காரின் சிறப்பு அம்சங்களாகும். இது 150 ஹெச்.பி. திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். மேனுவல் மாடலில் 6 கியர்களையும், ஆட்டோமேடிக் மாடலில் 7 கியர்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com