வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
Published on

பெரம்பலூர்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 428 வாக்குச்சாவடி மையங்களுக்கு 514 கட்டுப்பாட்டு கருவிகளும், 514 வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் கருவிகள் 548-ம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 388 வாக்குச்சாவடி மையங்களுக்கு 466 கட்டுப்பாட்டு கருவிகளும், 466 வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் கருவிகள் 497-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது எந்திரங்கள் பழுதுகள் ஏற்படின், அதனை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட ஒதுக்கீட்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 20 சதவீதம் கட்டுப்பாட்டு கருவிகளும், வாக்குப்பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் 28 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com