பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பொழிவு இல்லை. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 231 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 86.72 அடியாக இருந்தது.

நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வினாடிக்கு 129 கனஅடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 86.34 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 380 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com