கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பழையபேட்டை, கார்நேசன் திடல் காய்கறி மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரி எதிரில், பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் என மொத்தம் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதற்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளரும், முன்னாள் கவுன்சிலருமான அஸ்லம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன் கோவிந்தசாமி, இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சுதா சந்தோஷ்குமார், ஹேமாவதி பரந்தாமன், ஜோதி சுகுமார், முகமது அலி, செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் கராமத், நிர்வாகி சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com