61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கையில் 61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் மனு கொடுத்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கையில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு முதற்கட்டமாக 61 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைப்பதற்கான ஆணையையும், ஊராட்சி கூட்டமைப்பு நிதியின் கீழ் சிமெண்டு சாலை மற்றும் பேவர்பிளாக் சாலை என ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஆணையையும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு சலவை பெட்டியும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் .தமிழரசி(மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் வீரபத்திரன், வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com