மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

நெல்லை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவிகள் விடுதியில் 25 பேருக்கு தனித்திறமை தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா சான்றிதழ் வழங்கினார். பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரத்து 500 மதிப்பில் தளவாடம் மற்றும் உப கரணங்கள் வழங்கப்பட் டன.

மேலும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களில் 340 பேருக்கும், தென்காசி கோட்டத்தில் 540 பேருக்கும் தலா 11 கோழிகள், ரூ.1,500 மதிப்பில் கோழி கூண்டு வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com