வடிவேலுவுக்கும், சூரிக்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுவுக்கும், சூரிக்கும் மதுரைதான் சொந்த ஊர். இருவருமே ஏழை நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள். இரண்டு பேருக்குமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திருமணமாகி விட்டது.
வடிவேலுவுக்கும், சூரிக்கும் என்ன வித்தியாசம்?
Published on

இருவருக்கும் குழந்தை ரசிகர்கள் அதிகம். நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள். வடிவேல் 2 படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பது போல், சூரியும் 2 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இருவருமே நாள் கணக்கில் சம்பளம் (சில லட்சங்கள்) வாங்கி வருகிறார்கள். தயாரிப்பாளர், டைரக்டர் ஆகிய இருவரையும் பொருத்து சம்பளத்தை கூட்டி - குறைத்துக் கொள்கிறார்கள். வடிவேல் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை வீடுகளாகவும், தோட்டங்களாகவும் வாங்கியிருக்கிறார்.

சூரி, அம்மன் டீ ஸ்டால் என்ற பெயரில், மதுரையில் 6 டீக்கடைகளை ஆரம்பித்தார். இப்போது, அம்மன் உணவகம் என்ற பெயரில், சைவம் மற்றும் அசைவ ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். மதுரையில் உள்ள தனது தோட்டத்தில், 6 மாடுகளை வளர்த்து வருகிறார்.

இருவருமே இன்னோவா கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இரண்டு பேரும் மதுரைக்கு பறந்து விடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com