பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏன்?

சில பெண் குழந்தைகளுக்குக் கருப்பை வளர்ச்சியில் பிரச்சினைகள் இருக்கலாம். சிலருக்கு மூளையில் இருக்கும் கட்டி காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம். இவையெல்லாம் தாண்டி இன்று பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை ஹார்மோன் மாற்றங்கள்தான். தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், பருவமடைதலை தாமதப்படுத்துகின்றன.
பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏன்?
Published on

முந்தைய காலத்தில் 14 வயதுக்கு மேல்தான் பெண்கள் பூப்படைவார்கள். வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போது பல பெண் குழந்தைகள் 8 வயதிலேயே பருவம் அடைகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, சில பெண் குழந்தைகள் 15 வயதுக்குமேல் ஆகியும் பருவமடையாமல் இருப்பார்கள். அதற்கான காரணங்களை இங்கு பார்ப்போம்.

குறைந்த அல்லது அதிக உடல் எடையும், குரோமோசோம் குறைபாடும், பெண்கள் பருவம் அடையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். பரம்பரை வழியாக, பாட்டி, அத்தை, அம்மா ஆகியோர் தாமதமாகப் பூப்படைந்திருந்தாலும், அவர்கள் வழிவந்த பெண் குழந்தைகள் பூப்படைவது தாமதமாகலாம்.

கருப்பையில் இருக்கும் மெல்லிய படலமான 'ஹைமன்' எனும் கன்னிச்சவ்வு மூடியிருக்கும் துவாரம் வழியாகத்தான் உதிரப்போக்கு வெளியேறும். இந்த துவாரத்தில் அடைப்பு இருந்தால், பெண் குழந்தை பருவமடைந்தாலும் ரத்தப்போக்கு ஏற்படாது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும்.

சில பெண் குழந்தைகளுக்குக் கருப்பை வளர்ச்சியில் பிரச்சினைகள் இருக்கலாம். சிலருக்கு மூளையில் இருக்கும் கட்டி காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம். இவையெல்லாம் தாண்டி இன்று பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை ஹார்மோன் மாற்றங்கள்தான். தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், பருவமடைதலை தாமதப்படுத்துகின்றன.

பருவமடைதல் தாமதமாவதை எப்படிக் கண்டறிவது?

பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்குப் பிறகு, மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். அக்குள் பகுதியில் முடி வளர்ச்சி தென்படும். பிறப்புறுப்பு பகுதியிலும் முடிகள் வளர்ந்திருக்கும். 12 வயது ஆன பிறகும் இந்த அறிகுறி தென்படவில்லை எனில், முதலில் மருத்துவரை அணுக வேண்டும். முறையான பரிசோதனை மூலம் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.

'ஹைமன்' பிரச்சினையாக இருந்தால், துவாரத்தின் அடைப்பை நீக்கினாலே மாதவிடாய் ரத்தப்போக்கு வெளியேறும். ஹார்மோன் பிரச்சினை என்றால் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சி, உணவு முறை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். முருங்கைக் கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை போன்றவை சாப்பிடலாம். மாதுளை, பப்பாளி, கொய்யா ஆகிய பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், வாழைப்பூ, எள் போன்றவற்றை தொடர்ந்து உணவில் சேர்க்க வேண்டும்.

கருஞ்சீரகம், தென்னம்பாளை, தூதுவளை, பெருங்காயம், தென்னம்பூ, குங்குமப்பூ ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். தண்ணீரில் சோம்பு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வந்தால் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு சீராகும். இது பக்கவிளைவில்லாதது. தாவரங்களில் இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் இதில் உண்டு என்பதால், பருவமடைதலைத் தூண்டி மாதவிடாயை சீராக்கும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com