ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்.
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்
Published on

பந்தலூர்,

பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவில் 5 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் அவசர தேவைக்கு கூட வெளியே வர முடியாமல், அவர்கள் பீதி அடைந்தனர். மேலும் தேவாலா அருகே கைதகொல்லி பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

இதேபோன்று நேற்று மாலையில் சேரங்கோடு சாலையில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com