சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன
Published on

மதுக்கடைகள்

இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28-ந்தேதி (வியாழக்கிழமை) வள்ளலார் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

மூட வேண்டும்

எனவே இந்த 2 நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மூடப்பட வேண்டும். மேலும் உரிமம் பெற்ற கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்களும் மூட வேண்டும். மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com