மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மது விற்ற பெண் கைது
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கீழநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்த தேவகி(வயது 55) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம், விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேவகியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com