தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தேனி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

தேனி:

தேனி அருகே அன்னஞ்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 59). இவருடைய மனைவி ராணி (48). இவர்களுக்கு தீபிகா, சுபிக்ஷா என்ற 2 மகள்களும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் தீபிகாவுக்கு திருமணமாகி குடும்ப பிரச்சினையால் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் 2-வது மகள் சுபிக்ஷா கடந்த 15-ந்தேதி அதே ஊரைச் சேர்ந்த ராமன் என்பவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். மகள் தனக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதால் தினமும் ராணி தனது வீட்டில் அழுது கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய கணவர் ஆண்டவர் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com