தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருவண்ணாமலை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே தூக்குப்பேட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அஸ்வநாதசுரணை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், கூலி தொழிலாளி.

இவரது மனைவி சென்னம்மாள் (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னம்மாள் குடும்ப சூழ்நிலை காரணமாக பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருந்துள்ளார்.

மேலும் அவருக்கு கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்னம்மாளின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com