தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
லாலாப்பேட்டை
லாலாப்பேட்டை
Published on

லாலாபேட்டை

லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 27). இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், மன விரக்தியில் இருந்த சரஸ்வதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி பிரபு, லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com