தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

தளவாய்புரம்,மே.

சேத்தூர் அருகே தெற்கு தேவதானம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக தனித்தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஸ்லின் (33) தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com