கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

நெகமம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Published on

நெகமம்

நெகமம் அடுத்த வடசித்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மனைவி பாலாமணி (வயது 55). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை.

இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இதனால் அந்தப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நெகமம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பாலாமணியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com