தீக்குளித்து பெண் தற்கொலை

புதுவை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

புதுச்சேரி

புதுவை ஜீவா நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மனைவி பவானி. இவர்களுடன், பவானியின் தாயார் வனஜா (வயது 49) வசித்து வந்தார். இவருக்கு சற்று மனநலம் பாதித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 முறை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இந்தநிலையில் வனஜா 2-வது குறுக்கு தெருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் திடீரென உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com