நல்லம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

நல்லம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
நல்லம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் மயிலி (வயது 35). இவர் பாளையம் புதூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மயிலி நேற்று வழக்கம்போல் பேக்கரிக்கு சென்று பணியில் ஈடுபட்டார். அப்போது கிரைண்டர் மூலம் அரிசி மாவு அரைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மயிலி மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி கிழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு கொண்டு சென்றனர்.

விசாரணை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மயிலி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனைதொடர்ந்து மயிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com