மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
Published on

ஆலங்குடி, ஜூன்.24-
ஆலங்குடி அருகே உள்ள வம்பன்காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லட்சுமி (வயது58). இவர்களது மகள் நாகஜோதி (24). சம்பவத்தன்று தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் மேலக்கொத்தக்கோட்டை பிரிவு சாலையில் சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, கடையக்குடி ரெங்கசாமி மகன் வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் கீழே விழுந்ததில் லட்சுமி, நாக ஜோதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லட்சுமி இறந்தார். நாகஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com