கலபுரகியில் விஷம் கொடுத்து பெண் கொலை

கலபுரகி அருகே விஷம் கொடுத்து பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கலபுரகியில் விஷம் கொடுத்து பெண் கொலை
Published on

கலபுரகி:-

கலபுரகி மாவட்டம் சபர்பன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பபலாத் கிராமத்தை சேர்ந்தவர் காசீம். இவரது மனைவி லால்பீ (வயது 35). இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. திருமணம் ஆனது முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தனது மனைவி லால்பீயை தோட்டத்திற்கு காசீம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இநத நிலையில், தோட்டத்தில் வாயில் நுரை தள்ளியபடி லால்பீ பிணமாக கிடந்தா. இதுபற்றி அறிந்ததும் சபர்பன் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக லால்பீயை, அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்ல சாகீம் அனுமதிக்காமல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் கூட தனது மனைவியை வீட்டில் வைத்து தாக்கிவிட்டு, தோட்டத்திற்கு அழைத்து சென்று விஷத்தை கொடுத்து சாகீம் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபர்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகீமை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com