

ஆவடி,
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் பென்ஜமின். இவர், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்துவிட்டது.
இதில் மயங்கி விழுந்த சங்கீதாவை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பென்ஜமின் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.