பஸ் மோதி பெண் பலி

தூசி அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பஸ் மோதி பெண் பலி
Published on

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள மாங்கால் கிராமம் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரின் மகள் சாந்தி (வயது 32). இவர் கணவரை பிரிந்து 4 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார்.

இவர் மாங்கால் மெயின்ரோடு ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென அவர் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com