2 குழந்தைகளுடன் பெண் மாயம்

காரைக்காலில் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
2 குழந்தைகளுடன் பெண் மாயம்
Published on

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கருக்கன்குடியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 36). கொத்தனார். இவரது மனைவி வனிதா (33). இவர்களது மகள் சந்தியா (14). மகன் புகழேந்தி (10). இந்தநிலையில் சம்பவத்தன்று வனிதா தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்து மாயமானார். வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரமும் மாயமாகி இருந்தது. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் காளியப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான வனிதாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com