2 குழந்தைகளுடன் பெண் மாயம்

நெடுங்காடு அருகே 2 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
2 குழந்தைகளுடன் பெண் மாயம்
Published on

நெடுங்காடு

நெடுங்காடு அருகே கீழபுத்தகரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 34). இவரது மனைவி சுடர் (30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுகுமார் சென்னையில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் வீட்டில் இருந்த சுடர் மற்றும் 2 குழந்தைகளும் கடந்த 2-ந் தேதி மாலை வெளியே சென்றனர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி சுகுமாரின் தாய், அவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே அவர் சொந்த ஊருக்கு வந்து உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இது குறித்து நெடுங்காடு போலீசில் சுகுமார் அளித்த புகாரின்பேரில் மாயமான சுடர் மற்றும் 2 குழந்தைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com