பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் எள், உளுந்து, வெந்தயம்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் எள், உளுந்து, வெந்தயம் மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது.
பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் எள், உளுந்து, வெந்தயம்
Published on

வளர் இளம் பெண்களின் நலன் மீது அக்கறை செலுத்தும் பாரம்பரியம்தான் நம் பாரம்பரியம். மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மறந்து விட்டோம். தமிழகத்தில் பெண்கள் பூப்பு எய்திய பின் ஆரோக்கிய உணவு வகைகளை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த ஆரோக்கிய பழக்கம் தற்போது மெல்ல மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய ஒரு சில தினங்களுக்கு மட்டும் கொடுக்கும் சடங்காக சுருங்கிவிட்டது. எனவே காலம் காலமாக இருந்து வந்த அத்தகைய உணவுப்பழக்கத்தை தொடருவது மகளிர் நலன் சார்ந்தது. பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத் தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது, கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்.

தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது. இதில் எள், உளுந்து, வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது. எள்ளு உருண்டை தயார் செய்து தரலாம். 6 முதல் 14 நாட்கள் வரை உளுந்தங்களி கொடுக்கலாம். பூப்பெய்திய 15-வது நாள் முதல் 28-வது நாள் வரை வெந்தயக் கஞ்சி வழங்கலாம் என நம் முன்னோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com