உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை

பாகூர் அருகே உறவினரின் வீட்டில் தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.
உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை
Published on

பாகூர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவடி மெளசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டின் மாடி வழியாக சென்ற மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com