தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

திசையன்விளை:

உவரி அண்ணா நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெபக்கனி. ராமகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. ஆகையால் ஜெபக்கனி கடந்த சில நாட்களாக கணவரிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமகிருஷ்ணன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com