தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பூதப்பாண்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயன் (வயது57), தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்தநிலையில், வாழ்க்கையில் வெறுப்புற்ற சிங்கராயன் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிங்கராயன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com