தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தச்சு தொழிலாளி

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈசன்தங்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கிருஷ்ணமணி (வயது 32), தச்சு தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவி அஜிதாவுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அஜிதா, வருக்கதட்டில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமணி மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்றார். அவருடன் மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

சாவு

உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கிருஷ்ணமணி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அஜிதா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com