

மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் பொன்மணி (வயது 39). தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு சுகந்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பொன்மணி பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்மணி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது பெண்மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.