மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

விழுப்புரம்,

மரக்காணம் தாலுகா கரிப்பாளையத்தை சேர்ந்தவர் பழமலை மகன் பாஸ்கர் (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி ஜெயந்தியிடம் மது குடிப்பதற்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பாஸ்கர், விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com