தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுவையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

பாகூர்

கிருமாம்பாக்கம் உச்சிமேடு கேசவன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 39). டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. அவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு ஜெயமூர்த்தி அடிமையானார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ஜெயமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com