காரிமங்கலம் அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு

காரிமங்கலம் அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி இறந்தார்.
காரிமங்கலம் அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு
Published on

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஏஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் பைசுஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வேலையை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு புறப்பட்டார். அப்போது பைசுஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com